- அரசு மருத்துவமனை வளாகம்
- சட்டமன்ற உறுப்பினர்
- Thambaram
- பல்லவரம் எம்.எல்.ஏ.
- கருணாநிதி
- குரோம்பேட்டை அரசு மருத்துவமனை
- குரோம்பேட்டை
- பல்லாவரம்
- மருத்துவமனை
- தின மலர்
தாம்பரம்: குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள வளாகத்தில் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சத்தில் சமுதாய கழிப்பிடம் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி திறந்து வைத்தார். பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இவ்வாறு வந்து செல்லும்போது மக்களுக்கு போதுமான கழிப்பறை வசதிகள் இல்லாததால் மருத்துவமனை வளாகத்தில் கழிப்பறை வசதியை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயம் கழிப்பிடம் கட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று மாலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.
இதில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சமுதாய கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை தலைமை மருத்துவர் பழனிவேல், மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, பகுதி செயலாளர் இ.எஸ்.பெர்னாட், வட்டச் செயலாளர் காமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 27 லட்சம் செலவில் சமுதாய கழிப்பிடம்: எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.