கீழக்கரை, ஜூன் : கீழக்கரை, ஏர்வாடி பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருட்டு அதிகரித்து வந்தது. இதைத் தொடர்ந்து கீழக்கரை துணை கண்காணிப்பாளர் சுதிர்லால் தலைமையில் சிறப்பு தனிப்படை குற்றப்பிரிவு போலீசாரை நியமித்து ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு ஆய்வு செய்தனர். இதில் தொன்டி உடையார் தெருவை சேர்ந்த முகமது வாசிம்(21), தொன்டி எம்.ஜி.ஆர் நகர் அப்துல் ரகுமான்(25), எஸ்.பி.பட்டினம் கிழக்குத் தெரு முகமது முஸ்தபா(19) ஆகியோர் சாயல்குடி, ஏர்வாடி, மண்டபம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடி தொன்டிக்கு கொண்டு சென்று அங்கு விற்பனை செய்துள்ளது தெரிய வந்தது. இந்த தனிப்படை போலீசார் மூன்று பேரையும் தொன்டிக்கு சென்று கையும் களவுமாக பிடித்து அவர்கள் விற்பனை செய்த விலை உயர்ந்த 7 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து மூன்று பேரையும் கைது செய்து ஏர்வாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
The post கீழக்கரை,ஏர்வாடி பகுதியில் டூவீலர் திருடிய 3 பேர் கைது appeared first on Dinakaran.