×
Saravana Stores

சம்பா பருவ பயிர்களுக்கு பயிர்காப்பீடு செய்ய நவ.15 கடைசி

 

கீழக்கரை, நவ.8: பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2016-17ம் ஆண்டு காரீப் பருவத்தில் அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் நயினார்கோவில் வட்டாரங்களை உள்ளடக்கிய ராமநாதபுரம் பகுதிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த பொது காப்பீட்டு நிறுவனம் நிறுவனத்திற்கு அரசு ஆணை வழங்கியுள்ளது.

இப்பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்கலாம். பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் மத்திய அரசின் புதிய வழிகாட்டல்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு சம்பா நெல் பருவ பயிர் காப்பீடு செய்ய நவ.15 கடைசி நாளாகும். பொது சேவை மையம், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க சேவை மையங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் காப்பீடு செய்து கொள்ளலாம்.

The post சம்பா பருவ பயிர்களுக்கு பயிர்காப்பீடு செய்ய நவ.15 கடைசி appeared first on Dinakaran.

Tags : Geezalkarai ,Ramanathapuram ,Thirupullani ,Samba ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டு...