சேலம், ஜூன் 16: வீரதீர செயல்கள் புரிந்தமைக்காக குழந்தைகளுக்கு வழங்கப்படும் தேசிய குழந்தைகள் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் பிருந்தாதேவி ெதரிவித்துள்ளார். சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் ‘‘பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது-2024’’ அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதை பெற தகுதி வாய்ந்த குழந்தைகள், தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சமூக சேவை போன்ற துறைகளில் வீரதீர செயல்புரிந்த தனித்தகுதி வாய்ந்த குழந்தைகளை அங்கீகரிக்கும் விதமாக “பால சக்தி புரஷ்கார்” என்னும் குழந்தைகளுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. குழந்தைகள் மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலம் போன்ற துறைகளில், குழந்தைகளுக்கான சேவைகளில் தலைசிறந்த பங்களிப்பு செய்த தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் விதமாக “பால கல்யாண் புரஷ்கார்’’ என்னும் தேசிய விருதும் வழங்கப்படுகிறது.
The post தேசிய குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.