×

18ம் தேதிக்கு பிறகு வெளிமாநில பதிவெண் ஆம்னி பஸ்களை இயக்க கூடாது: அமைச்சர் எச்சரிக்கை

கடலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மணல் குவாரிக்கு எதிராக கடந்த 2015ம் ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான் வழக்கில் கடலூர் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆஜரானார். பின்னர் நீதிமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் அமைச்ச சிவசங்கர் கூறியதாவது: இந்தியாவிலேயே 20,000 பேருந்துகளை கொண்ட நிறுவனம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம். இது சிறப்பான சேவையை செய்து வருகிறது.

வெளி மாநில ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் இயக்கக் கூடாது என்பது விதி. இதற்காக ஏற்கனவே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் 18ம் தேதிக்கு பிறகு வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்கக் கூடாது. மீறி இயக்கினால் பேருந்துகளை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் 7200 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும், என்றார்.

The post 18ம் தேதிக்கு பிறகு வெளிமாநில பதிவெண் ஆம்னி பஸ்களை இயக்க கூடாது: அமைச்சர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Transport Minister ,Sivasankar ,Cuddalore District Primary Sessions Court ,Senturai ,Ariyalur District ,Minister ,Dinakaran ,
× RELATED 18ம் தேதிக்கு பிறகு வெளிமாநில பதிவெண்...