×

கலப்பு திருமணம் நடத்தி வைத்ததால் நெல்லையில் மார்க்சிஸ்ட் அலுவலகம் சூறை: 12 பேர் கைது

நெல்லை: நெல்லையில் கலப்பு திருமணத்தை நடத்தி வைத்ததால் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கி சூறையாடிய 12 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஆயுதப்படை அருகேயுள்ள நம்பிக்கை நகரை சேர்ந்தவர் மதன் (28). பாளை. பெருமாள்புரத்தை சேர்ந்த முருகவேல் மகள் உதய தட்சாயினி (23). இருவரும் காதலித்து வந்து உள்ளனர். மதனும், உதய தட்சாயினியும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனையறிந்த உதய தட்சாயினியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொள்வதற்கு திட்டமிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினரை தொடர்பு கொண்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் முன்னிலையில் மதன் – உதயதாட்சாயினிக்கு கலப்பு திருமணம் நடந்தது. இதனையறிந்த உதய தட்சாயினியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆத்திரமடைந்து நேற்று மாலை ரெட்டியார்பட்டியிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி அலுவலக கதவை உடைத்து பிளாஸ்டிக் சேர்கள், டேபிள்கள் உட்பட பல்வேறு பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். அப்போது அங்கிருந்த புதுமண தம்பதியினர் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு காரில் ஏறிச் சென்று தப்பி விட்டனர். இதுகுறித்து புகாரின்பேரில் 12 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கலப்பு திருமணம் நடத்தி வைத்ததால் நெல்லையில் மார்க்சிஸ்ட் அலுவலகம் சூறை: 12 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Nellai Marxist ,Nellai ,Marxist ,Madan ,Upima Nagar ,Palayamgottai Armed Forces ,Nellai District ,Palai ,Murugavel ,Perumalpuram ,Nella ,Dinakaran ,
× RELATED சாதி மறுப்பு திருமணம் செய்து...