×

குஜராத் மாநிலத்தில் ரூ.120 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்

குஜராத்: குஜராத் மாநிலத்தில் ரூ.120 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துவாரகா, கட்ச் மட்டுமல்லாது போர்பந்தரிலும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. துவாரகாவில் சுமார் ரூ.59 கோடி மதிப்புள்ள 115 போதைப்பொருள் பாக்கெட்டுகள் சிக்கின. கட்ச் கடற்கரையில் ரூ.61 கோடி மதிப்புள்ள 60 போதைப்பொருள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்துள்ளனர்.

உலகில் போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் மிக அதிக எண்ணிக்கையில் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் கடந்த சில காலமாகவே போதைப் பொருள் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், பல்வேறு முறைகேடான வழிகளில் போதைப் பொருளை இந்தியாவுக்குள் எடுத்து வரும் சம்பவங்கள் தொடர் கதையாகி இருப்பதுதான். இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில், போதை பொருள்கள் பறிமுதல் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக ஐநா போதை கடத்தல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 3 நாட்களில் மட்டும் குஜராத்தில் முக்கிய கடற்கரை பகுதிகளில் 200 போதைப்பொருள் பாக்கெட்டுகள் பிடிபட்டுள்ளன. இன்று, துவாரகாவில், ரூ.58,82,60,000 மதிப்புள்ள 115 போதைப்பொருள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கட்ச் புஜில், ரூ.61,66,34,500 மதிப்புள்ள மேலும் 60 போதைப்பொருள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

குஜராத் கடற்கரைகளில் அடுத்தடுத்து போதைப்பொருள் பாக்கெட்டுகள் சிக்குவதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 40.5 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் குஜராத்தின் கட்ச் பகுதியில் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த இரு வருடங்களில் மட்டும் கிட்டத்தட்ட 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் குஜராத்தில் கைப்பற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

The post குஜராத் மாநிலத்தில் ரூ.120 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Dwarka ,Kutch ,Porbandar ,Kutch beach ,Dinakaran ,
× RELATED குஜராத்தில் ரூ120 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!!