×

இளம் வழக்கறிஞர்களுக்கு உதவி தொகை தமிழ்நாடு பார்கவுன்சில் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் பணியாற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாயும், பிற நகரங்களில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும் உதவித்தொகையாக வழங்கவேண்டும் என்று அனைத்து வழக்கறிஞர்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்குமாறு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர்கள் நல நிதிச் சட்டத்தை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமல்படுத்தும்படி உத்தரவிடக் கோரி புதுச்சேரியைச் சேர்ந்த வழக்கறிஞர் பரிதா பேகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் நீதிபதி குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கறிஞர்கள் நல நிதியம் திட்டம் குறித்து முடிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டால் நிதிக்காக காத்திருப்பவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும். எனவே, தமிழ்நாடு மாற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் புதுச்சேரியில் உள்ள அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களும் ஒருங்கிணைந்து திட்டத்தை வகுப்பதை உறுதி செய்ய வேண்டும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு குறிப்பாக, சென்னை, மதுரை, கோவை போன்ற நகரங்களைச் சேர்ந்தவர் இளம் வழக்கறிஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடி வருகிறார்கள். அவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அவர்களுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்க வேண்டும் என்றும் பிற நகரங்களில் உள்ள நீதிமன்றங்களில் பணியாற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் உதவி தொகை வழங்க வேண்டும் என்றும் அனைத்து வழக்கறிஞர்களுக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் 4 வாரங்களுக்குள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இந்த உதவித்தொகை எந்த பாரபட்சமும் காட்டாமல் வழங்கப்படவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

The post இளம் வழக்கறிஞர்களுக்கு உதவி தொகை தமிழ்நாடு பார்கவுன்சில் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Bar Council ,CHENNAI ,Tamil Nadu ,Coimbatore ,Madurai ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...