×

பருவ மழை காலத்தை கருத்தில் கொண்டு நீர் ஆதாரப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல்


சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் நீர்வளத்துறையின் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: நீர்வளத்துறையின் மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறிப்பாக தடுப்பணைகள், அணைக்கட்டுகள், நீர் ஆதார கட்டுமானங்களில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகள், காவேரி டெல்டா படுகையில் தூர்வாரும் சிறப்பு பணிகள் ஆகிய அனைத்துப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்கப்பட வேண்டும்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் பெய்த அதீத கனமழை ஆகியவற்றின் காரணமாக நீர் நிலை கட்டுமானங்களில் ஏற்பட்ட சேதங்களை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் பருவ மழை காலத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக மேற்கொள்வதுடன், அணைகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணிக்கும் பணியை தொய்வில்லாமல் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார். கூட்டத்தில் அரசு சிறப்பு செயலாளர் முருகன், காவேரி தொழில்நுட்ப குழுமத்தின் தலைவர் சுப்ரமணியன், முதன்மைத் தலைமை பொறியாளர் அசோகன், தலைமைப் பொறியாளர் கலந்து கொண்டனர்.

The post பருவ மழை காலத்தை கருத்தில் கொண்டு நீர் ஆதாரப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Duraimurugan ,Chennai ,Chennai Chief Secretariat ,Water Department ,Dinakaran ,
× RELATED சட்டப்பேரவையில் கேள்வி நேரம் என்பது...