×

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு

 

திருவெறும்பூர், ஜூன் 12: திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பனையபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு செய்தார். திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது திருவனைக்கோவில் அருகே உள்ள பனையபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 52 மாணவர்களும் 39 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த பகுதிக்கு வந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திடீரென பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பள்ளி மாணவர்களிடம் பாட புத்தகங்களை படிக்க சொல்லி கேட்டறிந்ததோடு நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அப்பொழுது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியருக்கு போதிய கழிவறை வசதி இல்லை என அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் முறையிட்டனர். இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி அளித்து சென்றார்.

The post திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Minister ,Mahesh Poiyamozhi ,Panaiyapuram school ,Thiruvanaikovil ,Thiruverumpur ,Tamil Nadu School Education ,Anbil Mahesh Poiyamozhi ,Panaiyapuram Primary School ,Andanallur Panchayat Union of ,Trichy ,District ,Andanallur Panchayat Union ,Trichy District ,
× RELATED வடமாநிலங்களுக்கும் திராவிட...