×

தாராபுரத்தில் கூடைப்பந்து போட்டியில் வென்ற அணிகளுக்கு டிஎஸ்பி பரிசு

 

தாராபுரம், ஜூன் 11: தாராபுரத்தில் கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் பரிசுகளை வழங்கினார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் காவல் நிலையம் மற்றும் பாய்ஸ் கிளப் இணைந்து நடத்திய மாணவர்கள் இளைஞர்களுக்கான கூடைப்பந்து போட்டிகள் பொள்ளாச்சி சாலையில் உள்ள கூடை பந்து விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. தாராபுரம் நகரை சார்ந்த 8 அணிகள் விளையாட்டுகளில் பங்கேற்றன.

இதில் இளைஞர் கூடைப்பந்து கழகம் முதல் பரிசையும், கொங்குநாடு கூடைப்பந்து கழகம் இரண்டாவது பரிசையும், சென்டர் சென்ட்ரல் ஆப் எக்ஸலண்ட் அணி மூன்றாவது பரிசையும் தட்டிச்சென்றன. இதையடுத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கலையரசன், காவல் ஆய்வாளர் ரவி ஆகியோர் வெற்றி கோப்பைகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். முடிவில் கொங்குநாடு கூடைப்பந்து கழக தலைவர் சின்னசாமி நன்றி கூறினார்.

The post தாராபுரத்தில் கூடைப்பந்து போட்டியில் வென்ற அணிகளுக்கு டிஎஸ்பி பரிசு appeared first on Dinakaran.

Tags : DSP ,Tarapuram ,Dharapuram ,Deputy Superintendent of Police ,Tirupur District ,Tarapuram Police Station ,Boy's Club ,Pollachi ,Dinakaran ,
× RELATED போதைப் பொருட்கள் இல்லா சமுதாயத்தை...