×

தமிழ்நாட்டில் புதிதாக 2 லட்சம் ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளதாக உணவு பொருள் வழங்கல் துறை தகவல்

சென்னை: புதிதாக 2 லட்சம் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. புதிய ரேஷன் அட்டை கோரி இதுவரை 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மக்களவைத் தேர்தல் காரணமாக புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்று உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. இன்று முதல் தினமும் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும். தமிழ்நாடு ரேஷன் கடைகளில் விரைவில் புதிய பொருள் ஒன்றை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ரேஷன் கடைகளில் புதிதாக இனிமேல் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. தேங்காய் எண்ணெய் நேரடியாக விவசாயிகளிடம் வாங்கி விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலில் இதற்கான அறிவிப்புகள் பிரச்சாரத்தில் திமுகவினர் மூலம் கொடுக்கப்பட்டது. தற்போது அதற்கான சாத்திய கூறுகளை தமிழ்நாடு அரசு ஆய்வு செய்து வருகிறதாம். தமிழ்நாடு ரேஷன் கடைகள் தொடர்பான முக்கியமான அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. ரேஷன் கடைகளுக்கு பொருட்களை சப்ளை செய்யும் நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பாக முக்கியமான உத்தரவு ஒன்று சென்றுள்ளது. தமிழ்நாட்டில் ரேஷன் பொது விநியோக திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் செய்யப்படும் பல்வேறு மாற்றங்கள் தேசிய அளவில் பல மாநிலங்களில் கவனம் பெற தொடங்கி உள்ளன. பிற மாநில அரசுகளும் இந்த திட்டங்களை பின்பற்ற தொடங்கி உள்ளனர்.

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசு, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அட்டை ரீதியாக வழங்கப்பட்டது. அட்டையை பொருத்து பொருட்கள் வழங்கப்படும் வீதமும், அளவும் மாறி வருகின்றது. இந்த பொருட்கள் எடை மாறக்கூடாது, ஏமாற்ற கூடாது என்பதால் அதை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. ரேஷன் பொருட்களில் சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதிப்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. உணவு பொருட்கள் சுத்தமாக கிடைக்க வேண்டும். எடையில் ஏமாற்றம் செய்ய கூடாது என்பதால் பொருட்களை நியாயவிலை கடைகளில் பாக்கெட்டுகள் மூலமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அரிசி, சர்க்கரை. கோதுமை உள்ளிட்ட பொருட்களை பாக்கெட்டுகளில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் அரிசி, பருப்பு, சக்கரை, கோதுமை எடையில் மாற்றம் இருக்காது. பொருட்களும் பூச்சி இல்லாமல் சுத்தமாக இருக்கும். ரேஷன் கடைகளுக்கு பொருட்களை சப்ளை செய்யும் நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பாக முக்கியமான உத்தரவு ஒன்று சென்றுள்ளது. அதன்படி நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பாக வழங்கப்படும் பொருட்களை நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலகத்தில் ஒரு முறை எடை பார்க்க வேண்டும். ரேஷன் கடைகளுக்கு வந்ததும் ஒரு முறை எடை பார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நுகர்பொருள் வாணிபக்கழக பொருட்களில் எடை குறைவதாக வைக்கப்படும் புகார்கள் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

The post தமிழ்நாட்டில் புதிதாக 2 லட்சம் ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளதாக உணவு பொருள் வழங்கல் துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Food Supply Department ,Tamil Nadu ,Chennai ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...