×

கார்கிவ் நகரில் ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல்: உக்ரைனில் பதற்றம்!

கார்கிவ்: உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல் நடாத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா போர் தொடுத்த நிலையில் 2 ஆண்டுகளை கடந்தும் போர் நீடிக்கிறது. இந்த போரில் உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு முக்கிய நகரங்கள் சின்னாபின்னமாகி விட்டன. அப்பாவி மக்கள் உயிரிழப்பதும் நீடிக்கிறது. மேற்கத்திய நாடுகள் வழங்கும் ஆயுத உதவிகளால் ரஷ்யாவுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர ஐநா மற்றும் சர்வதேச நாடுகள் எடுக்கும் முயற்சி இன்னும் பலனளிக்கவில்லை.

உக்ரைன் நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர். 19 பேர் காயம் அடைந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். மக்கள் வசிக்கும் கட்டடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 16 ஏவுகணைகள் மற்றும் 13 டிரோன்கள் மூலம் எரிசக்தி மீது 8 தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

The post கார்கிவ் நகரில் ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல்: உக்ரைனில் பதற்றம்! appeared first on Dinakaran.

Tags : Russia ,Kharkiv ,Ukraine ,SARAMARI MISSILE ,CITY ,Dinakaran ,
× RELATED சென்னையில் 2 நாள் ரஷ்யா உயர் கல்வி கண்காட்சி