×

53-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு!

புதுடெல்லி: இந்தியாவில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட பிறகு தொடர்ந்து ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று 53-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி 52-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் 8 மாத இடைவெளிக்குப் பிறகு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அனைத்து மாநில அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் ஜி.எஸ்.டி விகிதத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்படும்.மேலும் இந்த கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கான வரிவிதிப்பு மற்றும் உரங்கள் மீதான வரியைக் குறைப்பதற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டுள்ளார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசின் சார்பில் இடம்பெற வேண்டிய கோரிக்கைகளை வழங்கினார். பேரிடர் நிவாரண நிதியாக ₹37,906 கோடியை மாநில அரசு கோரி இருந்த நிலையில், ஒன்றிய அரசு மிகக் குறைவாக ₹276 கோடி மட்டுமே விடுவித்துள்ளது. இது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அநீதி. தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான சீரழிவு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு தமிழ்நாடு அரசுக்கு ₹3000 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஒன்றிய நிதியமைச்சரிடம் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் 2021-22ம் ஆண்டு வரவு, செலவு திட்ட உரையில் ₹63,246 கோடி செலவில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணியை ஒன்றிய அரசு அறிவித்தது. இத்திட்டம், திட்ட முதலீடு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை குழுவின் ஒப்புதலுக்காக 3 ஆண்டுகளாக காத்திருக்கிறது. உடனடியாக இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து, புதிய நிதியை ஒதுக்க வேண்டும் என வேண்டுகோள்விடுத்துள்ளார்.

The post 53-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு! appeared first on Dinakaran.

Tags : 53rd G. S. T COUNCIL MEETING ,NADU ,MINISTER ,SOUTH RASU ,UNION FINANCE ,NIRMALA ,SITHARAMAN ,New Delhi ,India. ,D ,G. ,S. T ,Council ,53rd G. S. T Council ,Delhi ,52nd ,Tamil Nadu ,Finance ,Gold South ,Ru ,Union Finance Minister ,Nirmala Sitharaman ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற...