×

சீமானின் வளர்ச்சி கவனம் பெறுகிறது : மக்களவைத் தேர்தலில் 8.19% வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சிக்கு வைரமுத்து வாழ்த்து!!

சென்னை : மக்களவைத் தேர்தலில் 8.19 விழுக்காடு வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சிக்கு வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது சமூகவலைதள பக்கத்தில்,

மக்களவைத் தேர்தலில்
8.19 விழுக்காடு
வாக்குகள் பெற்றுத்
தேர்தல் ஆணையத்தின்
அங்கீகாரம் பெற்ற
நாம் தமிழர் கட்சியையும்
அதன் தலைமை
ஒருங்கிணைப்பாளர்
சீமானையும் பாராட்டுகிறேன்

ஆலின் விதையொன்று
தனித்து நின்று
ஓசையின்றித் துளிர்விடுவதும்
இலைவிடுவதும்போல
சீமானின் வளர்ச்சி
கவனம் பெறுகிறது

இந்த வளர்ச்சியால்
தமிழ்நாட்டு அரசியலில்
அவரைப்
பழிப்பது குறையாது
ஆனால் இனி –
கழிப்பது இயலாது

வாழ்த்துகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post சீமானின் வளர்ச்சி கவனம் பெறுகிறது : மக்களவைத் தேர்தலில் 8.19% வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சிக்கு வைரமுத்து வாழ்த்து!! appeared first on Dinakaran.

Tags : Seeman ,Vairamuthu ,Naam Tamilar Party ,Lok Sabha ,Chennai ,Nam Tamilar Party ,Lok Sabha elections ,Election Commission ,
× RELATED விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்...