×

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா: சீமான் அறிவிப்பு

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிவிப்பு: ஜூலை 10ம் தேதி நடைபெறும் விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா (இளங்கலை சித்த மருத்துவம்) போட்டியிடுகிறார். கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அபிநயா ஏற்கனவே நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தர்மபுரியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவர் 65,381 ஓட்டுகள் வாங்கினார். தற்போது இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா: சீமான் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Vikravandi ,Naam Tamilar Party ,Abhinaya ,Seeman ,CHENNAI ,Chief Convenor ,Doctor ,Legislative Assembly ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி சட்டமன்ற...