×

தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் மரபு மீறல் : காங்கிரஸ் விமர்சனம்

டெல்லி : மக்களவையின் தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் மரபும் வழக்கமான நடைமுறையும் மீறப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், “18-வது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த பர்த்ருஹரி மகதாப் நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவை உறுப்பினராக அதிக முறை பணியாற்றியவரே தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படுவதே மரபு மற்றும் நடைமுறை ஆகும். எம்.பி.யாக 8 முறை தேர்வான கொடிக்குன்னில் சுரேஷ் அல்லது வீரேந்திரகுமார் தான் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். வீரேந்திரகுமார் அமைச்சரானதால் காங்கிரசைச் சேர்ந்த கொடிக்குன்னில் சுரேஷ் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்,” இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

The post தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் மரபு மீறல் : காங்கிரஸ் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Congress ,Speaker of the People's Republic ,General Secretary ,Jairam Ramesh ,Parthruhari ,BJP ,18th ,Lok Sabha ,Congressional ,
× RELATED ஏழை மக்களுக்கான எந்த அறிவிப்பும்...