×

விமானத்தில் புகைபிடித்த ராமநாதபுரத்தை சேர்ந்த பயணி கீழே இறக்கிவிடப்பட்டார்

சென்னை: சென்னையிலிருந்து, மலேசியா செல்லும் விமானத்தில் புகைபிடித்த ராமநாதபுரத்தை சேர்ந்த பயணி கீழே இறக்கிவிடப்பட்டார். ராமநாதபுரத்தை சேர்ந்த ஆறுமுகம்(30), விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைக்கப்பட்டார். புகைபிடித்ததால் நேற்றிரவு 10 மணிக்கு மலேசியா புறப்பட இருந்த விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. விமானம் புறப்படும் முன் இருக்கையில் அமர்ந்தபடி, புகை பிடித்த ஆறுமுகத்துக்கு விமான பணிப்பெண்கள் அனுமதி மறுத்தனர். புகை பிடிக்காமல் இருக்க முடியாது என கூறி அடம்பிடித்து கீழே இறக்கப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

The post விமானத்தில் புகைபிடித்த ராமநாதபுரத்தை சேர்ந்த பயணி கீழே இறக்கிவிடப்பட்டார் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Chennai ,Malaysia ,Arumugam ,Chennai Airport Police ,Dinakaran ,
× RELATED பழக்கத்தை விடமுடியாது எனக்கூறி அடம்:...