×

தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்க கூட்டம்

 

திருச்சி, ஜூன் 10: தமிழ் மாநில கட்டிட தொழிலாளர்கள் சங்க அவசர கூட்டம் தாராநல்லுாரில் நடைப்பெற்றது. சிந்தாமணி பொன்னர் வரவேற்றார். மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். ஆன்லைன் சிஸ்டத்தை ரத்து செய்து தொழிற்சங்கம் தரும் அடையாளப்படுத்தும் அட்டை மூலம் வாரியத்தில் பதிய வேண்டும்.

இதனால் எந்த தொழிலும் செய்யாமல் ஆன்லைனில பதிவதால் தொழிலாளர் பணம் வீணாகிறது. பதிவு, புதுப்பித்தல், ஆயுள்சான்றுகள் உட்பட நலவாரிய ஆபிசில் குறைந்த கட்டணம் செய்து தர, வெளிமாநில தொழிலாளர்கள் வருகையை அரசு கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டம் நடைப்பெற்றது. முடிவில் நலவாரிய பிரதிநிதி மாவட்ட செயலாளர் சென்டிரிங் ராஜா நன்றி கூறினார்.

The post தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்க கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil State Building Workers Union Meeting ,Trichy ,Tamil State Building Workers Association ,Dharanallur ,Chintamani Ponnar ,Periyasamy ,District Vice President ,Natarajan ,Tamil State Building Workers Sangh ,Dinakaran ,
× RELATED திருச்சி-திண்டுக்கல் சாலையில் போலீஸ் வாகனம்-ஆட்டோ மோதல்