×

மண்ணச்சநல்லூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறு பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது

 

சமயபுரம், ஜூன் 10: மண்ணச்சநல்லூர் அருகே சாலையில் சாகசம் செய்து போக்குவரத்துக்கு இடையூறு செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். புலிவலம் பகுதியைச் சேர்ந்த சிங்காரத்தின் மகன் நிகேஷ் (19). இவர் கடந்த சில நாட்கள் முன்பு மண்ணச்சநல்லூர் துறையூர் நெடுஞ்சாலையில் ஒரு சமூகத்தை சேர்ந்த விழாவிற்கு பேரணியாக இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக அச்சுறுத்தும் வகையில் படுத்துக்கொண்டு வாகனத்தை இயக்கி சாகசம் செய்துள்ளார்.

அதனை புலிவலம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் மீடியா என்ற பெயரில் இன்ஸ்டா பக்கத்தில் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வந்த நிலையில் நேற்று டூ வீலர் சாகசத்தில் ஈடுபட்ட நிகேஷ் மீது 8 பிரிவின் கீழ் தண்டனைச் சட்டம் 114, 278, 279,286, 308,336 மற்றும் மோட்டார் வாகன சட்டம் 184 , 188 ஆகிய பிரிவு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இவரிடம் இருந்து டிவிஎஸ் 50 வாகனத்தை பறிமுதல் செய்து பின்னர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.

The post மண்ணச்சநல்லூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறு பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Mannachanallur ,Samayapuram ,Singharam ,Nikesh ,Pulivalam ,
× RELATED திருச்சி அருகே பயங்கரம் காதலை ஏற்க மறுத்த பெண் கொடூர கொலை: வாலிபர் கைது