×

போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது

 

திருச்சி, ஜூன் 10: திருச்சி பாலக்கரை கெம்ஸ்டவுன் பகுதியில் போதை மாத்திரை விற்பனைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்கள் பிடித்து போலீசார் விசாரனை மேற்கொண்டனர், விசாரனையில் பாலக்கரை ஆலம் தெரு பகுதியை சேர்ந்த ஆரிப்கான் (20), முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்த ஆரோக்கிய செல்வகுமார் (21) என்ற 2 வாலிபர்கள் சேர்ந்து கெம்ஸ்டவுன் பகுதியில் போதை மாத்திரைகளை சிறுவர்களுக்கு விற்க இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பாலக்கரை போலீசார் 2 வாலிபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

The post போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Gemstown ,Palakkarai, Trichy ,Dinakaran ,
× RELATED திருச்சி-திண்டுக்கல் சாலையில் போலீஸ் வாகனம்-ஆட்டோ மோதல்