×

ஆடிட்டர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளை

ஈரோடு: ஈரோடு சூரம்பட்டி என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணி (69). ஆடிட்டர். இவரது மனைவி சாதனா. தனியார் கல்லூரி பேராசிரியை. இவர்கள் சந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் முதல் மாடியில் வசித்து வருகின்றனர். மகன் அமரேஷ், பெங்களூருவில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் காலை தேனி மாவட்டத்தில் உள்ள உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர்.

வீட்டு உரிமையாளர் சந்திரன் நேற்று காலை சுப்பிரமணியின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அவருக்கு தெரிவித்தார். அவர் வந்து பார்த்தபோது, 150 பவுன் நகை மற்றும் ரூ.1.50 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து ஈரோடு தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையரை தேடுகின்றனர்.

The post ஆடிட்டர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode Surapatti ,Subramani ,Sadhana ,Chandran ,Amaresh ,Bengaluru ,
× RELATED கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த...