×

குட்டி யானை முதுமலை கொண்டு செல்லப்பட்டது!

கோவை: கோவை மருதமலை வனப்பகுதியில் தாயுடன் சேர்க்க முடியாததால், குட்டி யானை முதுமலை கொண்டு செல்லப்பட்டது. வனத்துறை ஊழியர்கள் மற்றும் பாகன்கள் 3 நாட்களாக முயற்சி செய்தும் குட்டி யானையை தாயுடன் சேர்க்க முடியவில்லை. வேறு யானை கூட்டத்துடன் குட்டி யானையை சேர்த்துவிடலாம் என்ற முயற்சியும் தோல்வியில் முடிந்தது. தாய் யானையை கண்டறிந்து, குட்டியை அதன் அருகில் கொண்டு சென்றபோது அது ஏற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post குட்டி யானை முதுமலை கொண்டு செல்லப்பட்டது! appeared first on Dinakaran.

Tags : Old Mountain ,KOWAI ,MUDUMMALI ,KOI ,MARUDAMALAI FOREST ,Dinakaran ,
× RELATED மருதமலை வனப்பகுதியில் தாயுடன்...