×

நிகேதன் பாடசாலை பள்ளி மாணவர்கள்; நீட் தேர்வில் சாதனை

திருவள்ளூர்: மருத்துவப் படிப்பதற்கான நீட் தேர்வில் திருவள்ளூர் வேடங்கிநல்லூரில் உள்ள  நிகேதன் பாடசாலை சிபிஎஸ்இ பள்ளியை சார்ந்த மாணவர்கள் திருவள்ளூர் நகர அளவில் சாதனை படைத்துள்ளனர். மாணவர் எம்.ஹேமேஷ் 720க்கு 660 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவர் ஹர்திப் சுயாஸ் 610 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் 2ம் இடம் பிடித்துள்ளார். அதேபோல் மாணவர் முகமது அபூபக்கர் ஆதில் 600 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் 3ம் இடம் பிடித்துள்ளார். இதில் முதல் முறை தேர்வு எழுதிய 44 மாணவர்கள் நீட் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். எனவே சாதனை படைத்த மாணவர்களின் வெற்றி, வருங்காலங்களில் நீட் தேர்வு எழுதக்கூடிய  நிகேதன் பள்ளி மாணவர்களுக்கு பெரும் ஊக்கத்தை வழங்கியுள்ளது.

அதேபோல் சமீபத்தில் நடைபெற்ற ஜேஇஇ பொதுத்தேர்வில் மாணவர் பி.ஆர்.ஜீவன் பிரணவ் 98.87% மதிப்பெண் பெற்று திருவள்ளூர் நகரின் முதல் மாணவராகத் திகழ்கின்றார். இவர் இயற்பியலில் 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். ஆர்.அபிநயா 98.76% மதிப்பெண் பெற்று 2ம் இடம் பிடித்துள்ளார். எஸ்.சமிக்க்ஷா 98.50% மதிப்பெண் பெற்று 3ம் இடம் பிடித்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து 27 மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் ப.விஷ்ணுசரண், முதன்மை செயல் அலுவலர்
பரணிதரன், பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.

 

The post நிகேதன் பாடசாலை பள்ளி மாணவர்கள்; நீட் தேர்வில் சாதனை appeared first on Dinakaran.

Tags : NIKETHAN HIGH SCHOOL STUDENTS ,NEET ,Thiruvallur ,Niketan School CBSE School ,Thiruvallur Vedanginallur ,M. Hemesh ,Niketan High School ,
× RELATED தொடரும் நீட் தேர்வு குளறுபடிகள்;...