×

ஜெயங்கொண்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற 10 கடைகளுக்கு அபராதம்

 

ஜெயங்கொண்டம் , ஜூன் 8: ஜெயங்கொண்டம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி ஆணையர் உத்தரவு படி பிளாஸ்டிக் பேப்பர் பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின்போது 30 கிலோ அளவுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த 10 கடைகளுக்கு ரூ. 5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம் நகராட்சி எல்லை பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக் மற்றும் கப்புகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலை முன்னிட்டு நகராட்சி ஆணையர் அசோக்குமார், நகராட்சி பொறியாளர் ராஜகோபாலன், துப்புரவு ஆய்வாளர் மணிவண்ணன், துப்புரவு மேற்பார்வையாளர் ரவி, காளிமுத்து, தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் உள்ளிட்டோர் பஸ் ஸ்டாண்ட் ரோடு, சிதம்பரம் ரோடு, உள்ளிட்ட முக்கிய வீதிகளில் மொத்தம் அந்த சில்லரை வியாபாரம் செய்யும் கடைகளில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட கடைகளில் இருந்த தடை செய்யப்பட்ட 30 கிலோ எடையளவு கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட10 கடைகளுக்கு ரூ 5 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதுபோன்று அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பிளாஸ்டிக் கப்புகள் விற்பனை செய்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் இது போன்ற சோதனைகள் அடிக்கடி நடைபெறும் எனவும் நகராட்சி ஆணையர் அசோக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post ஜெயங்கொண்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற 10 கடைகளுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Jayangkonda ,Jayangondam ,Jayangondam Municipality ,Dinakaran ,
× RELATED பள்ளியில் நடந்த சுற்றுச்சூழல்...