×

பெரம்பலூர் மாவட்ட தாலுகாக்களில் பொதுவிநியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்

பெரம்பலூர், ஜூன்15: பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர்க் கும் முகாம் இன்று 4 தாலுகாக்களில் நடைபெற உள்ளது. இதுகுறித்து கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண் பதற்கும், சிறப்புப் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம், பெரம்ப லூர் தாலுக்கா, அருமடல் கிராமத்தில், பெரம்பலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், வேப்பந்தட்டை தாலுக்கா,

பிம்பலூர் கிராமத்தில், மாவட்ட கலெக்டரின் கூடு தல் நேர்முக உதவியாளர் (நிலம்) தலைமையிலும், குன்னம் தாலுக்கா, பெண்ணக்கோணம் (வ) கிராமத்தில் பெரம்பலூர் சப் கலெக்டர் தலைமையிலும், ஆலத்தூர் தாலுக்கா, சில் லக்குடி (தெ) கிராமத்தில், பெரம்பலூர் மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் தலை மையிலும் இன்று (15 ஆம் தேதி) சனிக்கிழமை காலை 10மணியளவில் நடைபெற உள்ளது.
மேற்படி முகாமில், பொது மக்கள் கலந்து கொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான, குறைகளை தெரிவித்து, பயனடையு மாறு மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

The post பெரம்பலூர் மாவட்ட தாலுகாக்களில் பொதுவிநியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் appeared first on Dinakaran.

Tags : Perambalur District Taluks ,Perambalur ,Perambalur district ,4 ,Collector ,Karpagam ,
× RELATED பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கிராமத்தில் முறைகேடாக மது விற்ற நபர் கைது