×

ஓபிஎஸ், டிடிவி, ஏ.சி.சண்முகம், ஜான்பாண்டியன் கூட்டணியில் இணைந்ததே பாஜ வாக்கு சதவீதம் 11.24% ஆனதற்கு காரணம்: தனித்து களம் கண்டு இருந்தால் அண்ணாமலை, பொன்னார் போட்டியிட்டு இருக்க மாட்டார்கள்

சென்னை: ஓபிஎஸ், டிடிவி.தினகரன் போன்றவர்கள் கூட்டணியில் இணைந்ததே தமிழ்நாட்டில் பாஜ வாக்கு சதவீதம் 11.24% ஆனதற்கு முக்கிய காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் அமமுகவிற்கு 22 லட்சத்து ஆயிரத்து 564 வாக்குகள் கிடைத்தது. வாக்கு சதவீதம் என்று எடுத்துக் கொண்டால் 5.38%. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜ கூட்டணியில் அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் இணைந்தனர். இதில் அமமுகவிற்கு திருச்சி, தேனி தொகுதி ஒதுக்கப்பட்டது.

இதில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் 1,66,782 வாக்குகள் பெற்றார், தேனி தொகுதியில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் 2,78,825 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தனர். திருச்சி தொகுதியில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 1,00,747 வாக்குகளை பெற்றார். அதே நேரத்தில் பாமக, தமாகா, புதிய நீதிக்கட்சி, ஐஜேகே, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட மெகா கூட்டணியுடன் தான் பாஜ தேர்தலை சந்தித்தது. இதனால், தான் பாஜவின் வாக்கு சதவீதம் 11.24% ஆக அதிகரித்துள்ளது.

அதாவது கிட்டதட்ட அமமுக, ஓபிஎஸின் 6% சதவிகித வாக்குகள் பாஜவுக்கு சென்றுள்ளதே வாக்கு வங்கி உயர்ந்துள்ளதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பாஜ தனித்து போட்டியிட்டு இருந்தால் அனைத்து தொகுதிகளிலும் மண்ணை கவ்வி இருக்கும். தனித்து போட்டியிட்டு இருந்தால் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், ராதிகா சரத்குமார் போன்றவர்கள் போட்டியிட்டு இருக்க மாட்டார்கள். பெயர் தெரியாதவர்களை களம் இறக்கி வேடிக்கை பார்த்து இருப்பார்கள் என்பது தான் உண்மை.

The post ஓபிஎஸ், டிடிவி, ஏ.சி.சண்முகம், ஜான்பாண்டியன் கூட்டணியில் இணைந்ததே பாஜ வாக்கு சதவீதம் 11.24% ஆனதற்கு காரணம்: தனித்து களம் கண்டு இருந்தால் அண்ணாமலை, பொன்னார் போட்டியிட்டு இருக்க மாட்டார்கள் appeared first on Dinakaran.

Tags : OPS ,TTV ,A.C. Shanmugam ,Janpandian ,BJP ,Annamalai ,Ponnar ,CHENNAI ,Tamil Nadu ,DTV.Thinakaran ,2019 ,Lok Sabha ,AAMUK ,DTV ,AC Shanmugam ,Dinakaran ,
× RELATED தேனியில் 28 ஆண்டுக்கு பின் திமுக சாதனை...