×

நியூயார்க்கின் புதிய ஆடுகளத்தில் எப்படி ஆடுவது தெரியவில்லை: குழப்பத்தைச் சொன்ன ரோகித்

நியூயார்க்: உலககோப்பையின் முதல் ஆட்டத்தில் இந்தியா நேற்று முன்தினம் அயர்லாந்து அணியை வீழத்தியது. அதற்கு 37 பந்துகளில் 4பவுண்டரி, 3 சிக்சருடன் கேப்டன் ரோகித் சர்மா விளாசிய 52ரன்னும் முக்கிய காரணம். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்காக அதிக டி20 வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற சாதனையை டோனியுடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார். இவர்கள் தலா 43வெற்றிகளை பெற்றுள்ளனர்.

அயர்லாந்துக்கு எதிரான வெற்றிக்கு பிறகு பேசிய ரோகித் சர்மா, ‘டாஸ் வென்ற போதே சொன்னேன். புதிய சூழ்நிலையில் விளையாட வேண்டி உள்ளது. இதுப்போன்ற புதிய களத்தில் விளையாடி இருக்கிறோம். ஆனாலும் இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. ஆனாலும் சமாளிப்போம் என்று கூறியிருந்தேன். ஆனால் இந்த ஆடுகளத்தில் விளையாடும் போது என்ன எதிர்பார்க்கலாம் என்பது தெரியவில்லை. அதிலும் 5 மாதங்களே ஆன புதிய ஆடுகளத்தில் எப்படி ஆடுவது என்றும் தெரியவில்லை.

நாங்கள் விளையாடும் போது விக்கெட்கள் சரிந்ததற்கு அததான் காரணம் என்று நினைக்கவில்லை. அதே நேரத்தில் களம் பந்துவீச்சாளர்களுக்கு வசதியாக இருந்ததை மறுப்பதற்கில்லை. அதுமட்டுமல்ல எங்கள் வீரர்கள் நிறைய டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி அனுபவம் பெற்றவர்கள். அந்த அனுபவம் இல்லாத அர்ஷ்தீப் எடுத்த 2 விக்கெட்களும் முக்கியமானவை.

அணி சமநிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக வேகம், சுழல் என இரண்டு தரப்பிலும் சம எண்ணிக்கையில் வீரர்களை தேர்வு செய்தோம். ஆனால் இங்கு 4 சுழல் வீரர்களும் விளையாடுவார்கள் என்று நினைக்காதீர்கள். இங்கு வேகப்பந்துக்கு தான் வாய்ப்பு இருக்கிறது. மேலும் இந்த களத்தில் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு இங்கு என்ன மாதிரி விளையாடலாம் என்பதை வீரர்கள் புரிந்துக் கொள்வது அவசியம்’ என்று கூறியுள்ளார்.

* அதே களத்தில்….
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள நாசாவ் கவுன்டி சர்வதேச கிரிக்கெட் அரங்கத்துகான கட்டுமான பணிகள் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் தொடங்கியது. வெறும் 5 மாதங்களில் தயாரான ஐசிசிக்கு சொந்தமான இதே களத்தில்தான் நாளை மறுதினம் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா. தொடர்ந்து ஜூன் 12ம் தேதி அமெரிக்காவுடன் மோதுகிறது. இங்கு ஏற்கனவே நடந்த தென் ஆப்ரிக்கா-இலங்கை இடையிலான ஆட்டத்திலும் இரு அணிகளும் 80ரன்னை தாண்டவில்லை.

The post நியூயார்க்கின் புதிய ஆடுகளத்தில் எப்படி ஆடுவது தெரியவில்லை: குழப்பத்தைச் சொன்ன ரோகித் appeared first on Dinakaran.

Tags : New York ,Rohit ,York ,India ,Ireland ,World Cup ,Rohit Sharma ,T20 ,Dinakaran ,
× RELATED பவுலர்களால் வெற்றி…ரோகித் ஷர்மா பாராட்டு