×

திமுக கவுன்சிலர் மரணம்

ஈரோடு: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சுண்டாம்பட்டியை சேர்ந்தவர் ஸ்டாலின் (44). புதுக்கோட்டை மாவட்ட திமுக கவுன்சிலர். கடந்த 3ம் தேதி ஈரோட்டில் உள்ள நண்பர்களான சக்திவேல், விவேக், வினோத், ரமேஷ்குமார், சந்துரு, பவுன்ராஜ் ஆகியோரை பார்க்க பஸ்சில் வந்தார். ஈரோடு வில்லரசம்பட்டி பூச்சக்காட்டு தோட்டத்தில் சக்திவேல் உறவினர் வீட்டில் அனைவரும் தங்கினர். கடந்த 4ம் தேதி இரவு ஸ்டாலின் அவரது நண்பர்கள் அனைவரும் ஒரே அறையில் தூங்கினர். நேற்று முன்தினம் அதிகாலை ஊருக்கு புறப்பட தயாரான நிலையில், ஸ்டாலின் இறந்து கிடந்தார்.

The post திமுக கவுன்சிலர் மரணம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Erode ,Stalin ,Kandarvakottai Sundampatti ,Pudukottai district ,Councillor ,Sakthivel ,Vivek ,Vinod ,Rameshkumar ,Sanduru ,Paunraj ,Erode Villarasambatti ,
× RELATED திமுக-காங். கூட்டணியில் எந்த மாற்றமும்...