×

துறையூர் நீதிமன்றத்தில் மருத்துவ முகாம்

துறையூர், மே 6: துறையூர் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் துளசி பார்மசி இணைந்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மருத்துவ முகாம் நடத்தின. துறையூர் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் உத்திராபதி தலைமை வகித்தார். சங்க செயலாளர் சசிகுமார் முன்னிலை வகித்தனர். சார்பு நீதிபதி ஜெய்சங்கர், மாவட்ட உரிமையியல் நீதிபதி சத்தியமூர்த்தி, குற்றவியல் நடுவர் நர்மதா ராணி உள்ளிட்டோர் முகாமை பார்வையிட்டனர். இம்முகாமில் கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், வழக்காடிகள் பங்கேற்றனர்.பல் மருத்துவர் மவுனா, துளசி பார்மஸி அருண்மொழிவர்மன், கருணாகரன், மௌஸ்மீ, பிரதிக்ஷா, மேக்ஸி விஷன் கண் மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

The post துறையூர் நீதிமன்றத்தில் மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Durgayur court ,Dharayur ,Dharayur Bar Association ,Tulsi Pharmacy ,Integrated Court Complex ,Udtrapati ,President ,District Bar Association ,Sasikumar ,Dinakaran ,
× RELATED துறையூர் பகுதியில் தொடர் மழை...