×

மக்களவை தேர்தலில் பாஜ கூட்டணி வெற்றி பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து

லண்டன்: மக்களவை தேர்தலில் பாஜ கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து உலக நாடுகளின் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், “வரலாற்று சிறப்பு மிக்க தேர்தலில் வாக்களித்த 65 கோடி வாக்காளர்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு வாழ்த்துகள். வரம்பற்ற சாத்தியக்கூறுகளுடன் எதிர்காலத்திலும் நம் நாடுகளிடையேயான நட்பு வளர்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பிரதமர் மோடிக்கு தொபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், “இந்தியாவும், இங்கிலாந்தும் நெருக்கமான நட்பை பகிர்ந்து கொள்கின்றன. இந்த நட்பு தொடர்ந்து மேலும் செழித்து வளரும்” என்று செய்தி வௌியிட்டுள்ளார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலை இந்தியா நடத்தி முடித்துள்ளது. என் அன்பு நண்பரே, உங்களுக்கு எங்கள் வாழ்த்துகள். இந்தியாவையும், பிரான்சையும் இணைக்கும் மூலோபாய கூட்டாண்மையை தொடர்ந்து வலுப்படுத்துவோம்” என கூறியுள்ளார்.

இத்தாலி பிரதமர் ஜார்ஜியோ மெலோனி தன் டிவிட்டர் பதிவில், பாஜவின் புதிய வெற்றிக்கும், சிறப்பாக செயல்படவும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியா, இத்தாலி உறவை வலுப்படுத்த, நம் மக்களின் நல்வாழ்வுக்காக தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வௌியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தொடர்ந்து 3ம் முறையாக மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மோடிக்கு என் இதயப்பூர்வ வாழ்த்துகள். இந்தியா, இஸ்ரேல் இடையேயான உறவு புதிய உச்சத்தை நோக்கி செல்லட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, ,சீன வௌியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மாவோ நிங் ,இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதேபோல் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், நேபாள காங்கிரஸ் தலைவர் ஷேக் பகதூர் தியூபா, பார்படாஸ் அதிபர் மியா அமோர் மோட்லி, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமது முய்சு, பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

The post மக்களவை தேர்தலில் பாஜ கூட்டணி வெற்றி பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Modi ,BJP ,Lok Sabha elections ,London ,US ,President ,Joe Biden ,PM Modi ,Dinakaran ,
× RELATED வரும் 20ம் தேதி சென்னை வரும் பிரதமர்...