×

மின்கம்பத்தை இடம் மாற்றாமல் தார்ச்சாலை: பொதுமக்கள் புகார்

 

பல்லடம், ஜூன் 5: பல்லடம் மாணிக்காபுரம் சாலை பகுதியில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்குள்ள மின் கம்பத்தை இடம் மாற்றாமலும், தரமில்லாமலும் தார் சாலை அமைக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘மின்கம்பத்தை இடம் மாற்றி அமைக்க பலமுறை கூறியும். மின்கம்பத்தை இடம் மாற்றாமல் தார் சாலை அமைக்கின்றனர். மேலும் கழிவு நீர் கால்வாய்கள் சுத்தம் செய்யாத காரணத்தினால் கழிவு நீர் தேங்கி நின்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை இடம் மாற்றி அமைக்க வேண்டும். தரமான தார்ச்சாலை அமைக்க வேண்டும்’’ என்றனர்

 

The post மின்கம்பத்தை இடம் மாற்றாமல் தார்ச்சாலை: பொதுமக்கள் புகார் appeared first on Dinakaran.

Tags : Palladam ,Manikkapuram ,Tharchala ,Dinakaran ,
× RELATED புகையிலை பொருட்கள் பறிமுதல்