×

போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயன்றவர் கைது

 

திருச்சி, ஜூன் 5: பெரம்பலூர் மாவட்டம் சுமங்கலி நகர், மாரியம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகராஜா (51). இவர் மலேசியாவில் பணியாற்றி வருகிறார். நேற்று மலேசியா செல்ல திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அவரது பாஸ்போட்டை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், அவர் போலி ஆவணங்களை பயன்படுத்தி, பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது. இது குறித்து இமிகிரேசன் அதிகாரி ஏர்போட் போலீசில் புகார் அளித்தார். புகாரின் ேபரில் போலீசார் வழக்குப் பதிந்து, சண்முகராஜாவை நேற்று கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

 

The post போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயன்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Malaysia ,Tiruchi ,Sanmukharaja ,Mariyamman Koil Street, Sumangali Nagar, Perambalur District ,Trichy Airport ,
× RELATED விமானத்தில் புகைபிடித்த...