×

திருமணத்தில் உள்ள சிக்கலும், அதை தீர்க்கும் வழிகளும்

இல்லற வாழ்வில், ஆணிற்கு சம்பாதிக்கும் பொறுப்பை மட்டும் கொடுத்து, குடும்பத்தை நடத்தும் பொறுப்பை மனைவியிடம் கொடுத்திருந்தனர் மூதாதையர். காரணம், பெண்களுக்கு இயல்பாகவே பல்முனை செயல்திறன் (Multi-tasking) கொண்டவர்கள். பொதுவாக, குடும்பம் என்பது கணவன் – மனைவி இருவரும் சேர்ந்து இணக்கமாக, ஒருமித்த, ஒரு பொதுவான நோக்கத்துடன் (Common Goal) நடத்த வேண்டிய நிகழ்வு. ஆனால் இன்றைய வாழ்வியலில், பெண்களும் சம்பாதிக்க செல்வதால், குடும்ப பொறுப்புகளை சமமாக பங்கீடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இயற்கையாகவே, ஆண்களால் குடும்ப பாதுகாப்பு, வருமானம் சார்ந்த நிகழ்வுகளை செய்ய முடியும் என்ற காரணத்தால், இதர குடும்ப வேலைகளான, குழந்தை பராமரிப்பு, வீட்டு வேலைகள் போன்றவற்றை இயல்பாக செய்ய முடியாத வேலைகளாக இருக்கிறது. (உதாரணமாக Single parent ஆண்கள், குடும்பத்தையும் குழந்தை வளர்ப்பிலும், மிகவும் சிரமப்படுவார்கள். அதுவே ஒரு பெண்ணால் அந்தப் பொறுப்பை மிகச் சிறப்பாக செய்ய முடியும்.)

இதனால் குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஈகோ பிரச்னை ஏற்படுகிறது. இவ்வாறு குடும்பம் என்பது கணவன் – மனைவி இருவரின் ஒரு தனிப்பட்ட நோக்கமாக (Individual Goal) மாறியிருப்பதைக் காண முடிகிறது. ALP முறைப்படி, ALP லக்னாதிபதி, ALP லக்னத்திற்கு இரண்டாம் வீட்டிலோ அல்லது எட்டாம் வீட்டிலோ இருந்தாலும், மற்றும் ஏழாம் பாவக அதிபதி, ஏழாம் பாவகத்திற்கு இரண்டாம் வீட்டிலோ, அல்லது எட்டாம் வீட்டில் இருந்தாலும், ஜாதகருக்கும் களத்திரத்திற்கும் குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவும், வருமானம், மற்றும் பேச்சுத் தொடர்பான நிகழ்வுகளிலும் பிரச்னை நிச்சயமாக உருவாகும். கணவன் – மனைவிக்கிடையே அதுவே அவமானத்தைக் கொடுக்கக்கூடிய நிகழ்வாக இருக்கும். இதுதான் ஈகோக்கான பிரதான காரணமாக அமைகிறது. யார் சரி என்பதை காட்டிலும், எது சரி என்பதுதான் முக்கியம் என்பதை உணர வேண்டும்.

திருமணம் என்பது நீண்ட நாட்கள் தொடர வேண்டிய ஒரு பந்தம் என்பதால், ஒவ்வொரு வருடத்திற்கும் (ஒரு வருடம் ஒரு மாதம் பத்து நாட்கள்) திருமண பொருத்தம் நிச்சயம் பார்க்கப்பட வேண்டும். ஆகையால், குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கான வழிகாட்டுதல்களை ஒவ்வொரு ஆண்டுக்குமான பலன்களை, அட்சய லக்ன பத்ததி (ALP) ஜோதிடர்களை அணுகி, ஆலோசனை பெற்று பயன் பெறலாம்.

அட்சய லக்ன பத்ததி (ALP) லக்னப் பொருத்தம் வயதிற்கேற்ற லக்னம். அட்சய லக்னம் என்பது வளரும் லக்னம். வயதினுடைய லக்னம். வயது மாற மாற ஒரு ஜாதகருடைய எடை கூடுகிறது. மேலும், அவருடைய அறிவுத்திறமை அவருடைய கர்மாவை அடிப்படையாகக் கொண்டு வளர்கிறது. ஒருவர் ஒரு ஊரில் பிறக்கிறார் என்றால், அவர் தன்னுடைய ஊரை மாற்றிக் கொண்டு படிப்பதற்காக அல்லது வேலை செய்வதற்காக வேறு ஊர் செல்கிறார். உதாரணமாக ஒருவர் சென்னையில் பிறக்கிறார் என்றால் அவர் படிப்பதற்காக மும்பை செல்கிறார். மேலும் வேலை செய்வதற்காக லண்டன் செல்கிறார். மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல், உடல் வளர்ச்சியும், மன வளர்ச்சியும் ஒவ்வொரு மனிதனுடைய வயதுதிற்கு ஏற்றார் போல், வளர்ச்சி ஏற்பட்டு ஒவ்வொரு சூழ்நிலைகளையும் நகர்வுகளையும் தெளிவாக குறிப்பிடுவது அட்சய லக்னம் மட்டுமே.

தசா புத்தியை மட்டும் வைத்துப் பார்த்தால், அவருடைய எண்ண ஓட்டத்தை அளவீடு செய்ய முடியும். ஆனால் அவருடைய இடமாற்றத்தை அட்சய லக்னம் மட்டுமே காண்பித்துக் கொடுக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. பிறப்பினுடைய லக்னம் ஒரு ஜாதகருடைய கர்மப் பதிவுகளை கொண்டது, ஜாதகர் அனுபவிக்க வேண்டிய கர்மாவை சூட்சுமமாக ரகசியமாக தெரியப்படுத்துவது. ஆனால், அட்சய லக்னம் மட்டுமே அவர் எந்த பாதையில் பயணிக்கிறார் என்பதை எடுத்துக்காட்டி, தற்பொழுது என்ன கர்மாவை அவர் சுமந்து கொண்டிருக்கிறார் என்பதை சுட்டிக் காட்டுகிறது. அட்சய லக்ன பத்ததியில் கால நிர்ணயம் (timing of event) என்பது உறுதியான ஒன்று. மேலும் இது நிரூபிக்கப்பட்ட ஒரு ஜோதிட முறையாகும்.

தொகுப்பு: கிரி ஜானகிராமன்

The post திருமணத்தில் உள்ள சிக்கலும், அதை தீர்க்கும் வழிகளும் appeared first on Dinakaran.

Tags :
× RELATED துலாம் ஆணுக்கு பொருந்தும் பெண்