×

நாதஸ்வர வித்வான் வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன், ஒரு கிலோ வெள்ளி கொள்ளை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காக்களூர் பாக்கியம் நியூடவுன் பகுதியை சேர்ந்தவர் சிரஞ்சீவி(40). நாதஸ்வர வித்வான் தொழில் செய்து வரும் இவர், நேற்று முன்தினம் 1ம் தேதி காலை ஆவடியில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றவர் நேற்று 2ம் தேதி மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளி மற்றும் இரண்டு வைர மூக்குத்தி திருடு போனது தெரிய வந்தது.

இது குறித்து சிரஞ்சீவி திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் டிஎஸ்பி அழகேசன், இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். மேலும் மோப்ப நாய் விக்கி வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

The post நாதஸ்வர வித்வான் வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன், ஒரு கிலோ வெள்ளி கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Sawarans ,Nataswara Vidwan ,Tiruvallur ,Chiranjeevi ,Bhakyam Newtown ,Kakkalur ,Nathswara Vidwan ,Avadi ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் கொள்ளை..!!