×

இந்தியாவுக்கு எதிரான போட்டி; மிதமிஞ்சிய ஆவலும் சற்று பதற்றம் அளிக்கிறது: பாக். கேப்டன் பாபர் அசாம் பேட்டி

நியூயார்க்: டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். வரும் 9-ந்தேதி இந்த போட்டி நியூயார்க்கில் நடக்கிறது. இந்நிலையில் இப்போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறியதாவது:- எப்போதுமே மற்ற போட்டிகளை விட இந்தியா- பாகிஸ்தான் மோதல் குறித்து அதிகம் பேசப்படும் என்பதை நாம் அறிவோம். உலகக் கோப்பை அட்டவணையில் இந்த போட்டிதான் மாறுபட்ட உணர்வை ஏற்படுத்துகிறது. வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் நிறைய உற்சாகத்தை அளிக்கிறது.

உலகில் எங்கு சென்றாலும் இந்தியா- பாகிஸ்தான் போட்டி குறித்து தான் பேசுவார்கள். இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பும், மிதமிஞ்சிய ஆவலும் சற்று பதற்றம் அளிக்கிறது. பதற்றத்தை எவ்வாறு சிறப்பாக கையாள்கிறீர்கள், அடிப்படை விஷயங்களில் எவ்வாறு துல்லியமாக கவனம் செலுத்துகிறீர்கள் என்பதை வைத்துதான், ஒரு வீரராக உங்களை இயல்பாக வைத்திருக்க உதவும். இந்த போட்டி மிகப்பெரிய அழுத்தம் நிறைந்ததாகும். பதற்றமின்றி தொடர்ந்து அமைதியான மனநிலையில் இருந்து, உங்களது திறமை மீது நம்பிக்கை வைத்து உழைத்தால் எல்லாமே எளிதாகிவிடும். இது தான் சக வீரர்களுக்கு நான் கூறும் அறிவுரை’ என்றார்.

The post இந்தியாவுக்கு எதிரான போட்டி; மிதமிஞ்சிய ஆவலும் சற்று பதற்றம் அளிக்கிறது: பாக். கேப்டன் பாபர் அசாம் பேட்டி appeared first on Dinakaran.

Tags : India ,Babar Assam ,New York ,Pakistan ,T20 World Cup cricket ,Babar Azam ,Dinakaran ,
× RELATED ஆட்டத்திறன் மீதும் நம்பிக்கை...