×

2026ல் சட்டப்பேரவை தேர்தலில் பாஜ தலைமையில் தமிழகத்தில் கூட்டணி: ஜி.கே.வாசன் பேட்டி

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துகணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தாண்டி மக்கள் கணிப்புகளின் படி, இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். மூன்றாவது முறையாக பாஜ ஆட்சி அமைத்து நல்லரசாக செயல்படும். இந்தியாவை வல்லரசாக மாற்றுவதுடன், நாட்டின் உயர்வில் எங்களுக்கும் பங்குண்டு.

தனிமனிதர்கள் மதம் மற்றும் இறை ஈடுபாடு உடையவர்களாக இருக்கலாம். நாட்டின் நலனை கருதி தியானம் இருப்பது தனிமனித ஒழுக்கம். நேர்மை, எளிமைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் கட்சி தமாகா என, மக்கள் அறிவார்கள். 2026ல் தமிழ்நாட்டில் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜ தலைமையில் நல்ல கூட்டணி அமையும்’’ என்றார்.

 

The post 2026ல் சட்டப்பேரவை தேர்தலில் பாஜ தலைமையில் தமிழகத்தில் கூட்டணி: ஜி.கே.வாசன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Alliance ,Tamil Nadu ,BJP ,2026 assembly elections ,GK Vasan ,Karaikudi ,Sivagangai district ,TAMAGA ,president ,National Democratic Alliance ,India ,
× RELATED தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்