×

சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் எஸ்.கே.எம். கட்சி 31 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது

காங்டாக்: சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் எஸ்.கே.எம். கட்சி 31 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. 2019-ல் நடந்த சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலில் எஸ்.கே.எம். கட்சி 17 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்திருந்தது. இந்த முறை 32 இடங்களில் 31 இடங்களை வென்று எஸ்.கே.எம். கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது.

சிக்கிம், அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இரு மாநில பேரவையின் பதிவிக்காலம் இன்றுடன் முடிவதால் முன்கூட்டியே எண்ணிக்கை நடைபெறுகிறது. மக்களவைக்கு பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட உள்ளது. காலை 6 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

18-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (04.06.2024) எண்ணப்படுகிறது. அதே நாளில் 4 மாநில சட்டசபை தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிமில் மட்டும் ஜூன் 2-ம் தேதியான இன்று சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேர்தல் கமிஷன் பின்னர் அறிவித்தது.

சிக்கிம், அருணாச்சலப் பிரதேச, ஆகிய 2 மாநிலங்களின் சட்டசபைகளின் பதவிக்காலமும் ஜூன் 2-ம் (இன்று)தேதியுடன் நிறைவு பெறுவதன்.காரணமாக இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஓரிரு நாள்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை இல்லாத சூழ்நிலை ஏற்படலாம் என்பதை தவிர்க்கவே வாக்கு எண்ணிக்கை தேதியை தேர்தல் ஆணையம் மாற்றியமைத்தது.

அதன்படி சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 6 மணிக்கு தொடங்கியது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் உள்ள 6 இடங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. சிக்கிமில் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி 32 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவை தொகுதிக்கு ஒரே கட்டமாக நடந்த தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவானது. சிக்கிம் மாநிலத்தின் 32 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. அதன். 32 சட்டப்பேரவை தொகுதிகள் 31 தொகுதிகளை கைபற்றி ஆளும் எஸ்.கே.எம். கட்சி ஆட்சியை தக்கவைக்கிறது.

The post சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் எஸ்.கே.எம். கட்சி 31 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது appeared first on Dinakaran.

Tags : Sikkim Sachapera ,S. K. M. ,Kangtak ,Sikkim ,Legislative ,Assembly ,Election ,2019 Sikkim Legislative Assembly Election ,Sikkim Sachaperava ,Dinakaran ,
× RELATED சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும்...