×

மண்ணச்சநல்லூரில் உலக ஓட்டுநர் தினம் கொண்டாட்டம்

 

 

சமயபுரம், ஜூன் 2: மண்ணச்சநல்லூர் மேற்கு பகுதியில் சிஐடியூ ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் ஜூன் 1ம்தேதி உலக ஓட்டுநர் தினம் கொண்டாடப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். ஜூன் 1ம் தேதி உலக ஓட்டுநர் தினமாக கொண்டாடப்படுகிறது. மண்ணச்சநல்லூர் மேற்கு பகுதியில் திருச்சி புறநகர் மாவட்டம் சிஐடியூ ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் உலக ஓட்டுநர் தினம் கொண்டாடப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மண்ணச்சநல்லூர் பகுதி தலைவர் மணிவண்ணன், பகுதி செயலாளர் செந்தில், ஆட்டோ சங்க மாவட்ட துணை தலைவர் தண்டபாணி ஆகியோர் தலைமையில் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் சந்திரசேகர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைத்து ஓட்டுநர்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. அப்போது, சாலை விதிகளை மதிப்போம், சாலை விபத்தை தவிர்ப்போம், ஓட்டுநர் தொழிலை நேசிப்போம், பெண்கள் குழந்தைகள் பயணத்தை பாதுகாப்போம், மோட்டார் வாகன தொழிலை நேசிப்போம், உரிமைகளை பாதுகாப்போம், ஜூன் 1 உலக ஓட்டுநர் தினத்தை மத்திய அரசு அரசிதழ்களில் வெளியிட வேண்டும் என்று உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சயில் 50க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

The post மண்ணச்சநல்லூரில் உலக ஓட்டுநர் தினம் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : World Driver's Day ,Manchanallur ,Samayapuram ,World Drivers Day ,CITU Auto Workers Union ,Mannachanallur West ,Mannachanallur… ,Mannachanallur ,
× RELATED திருச்சி அருகே பயங்கரம் காதலை ஏற்க மறுத்த பெண் கொடூர கொலை: வாலிபர் கைது