×

பல்லடம் அரசு பள்ளிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் விநியோகம்

 

பல்லடம், ஜூன் 1: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டு வருகிறது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கான நோட்டு, புத்தகங்கள் பள்ளிகளுக்கு விநியோகிக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது.

பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்டு 85 அரசு துவக்க, நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், தமிழ் வழியில் 7,929 மாணவ, மாணவிகள், ஆங்கில வழியில் 2,312 மாணவ, மாணவிகள் என மொத்தம் 10,241 மாணவர்கள் உள்ளனர். பள்ளிக்கல்வித்துறை சார்பில் மூன்று பருவங்களுக்குமான நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், நேற்று முதல் பருவத்திற்கான நோட்டு, புத்தகங்கள் பல்லடம் அரசு கல்லுாரி வளாகத்தில் வைத்து வழங்கப்பட்டன.

The post பல்லடம் அரசு பள்ளிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Palladam ,Dinakaran ,
× RELATED புகையிலை பொருட்கள் பறிமுதல்