×

சில்லி பாயின்ட்…

* தாய்லாந்தின் பாங்காக் நகரில் ஒலிம்பிக் தகுதிச் சுற்று குத்துச் சண்டைப் போட்டி நடைபெறுகிறது. அதில் இந்திய வீராங்கனை அங்குஷிதா போரோ(60கிலோ), வீரர் நிஷாந்த் தேவ்(71கிலோ) நேற்று தங்கள் பிரிவுகளில் வென்று காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

* ‘டி20 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பு இந்தியாவுக்கு வாய்ப்பு இல்லை. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள்தான் இறுதி ஆட்டத்தில் விளையாடும்’ என்று ஆஸி பந்து வீச்சாளர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

* நார்வே செஸ் போட்டியின் 3வது சுற்றில் உலகின் நெம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்லசனை(நார்வே), இந்திய இளம் வீரர் ஆர்.பிரகஞானந்தா வீழ்த்தினார். இந்நிலையில் 4வது சுற்றில் நேற்றிரவு மற்றொரு முன்னணி வீரரான ஹிகாரு நகமுரா (அமெரிக்கா) உடன் மோதினார்.

* உலக கோப்பை தகுதிச் சுற்று ஆட்டங்களில் கத்தார் அணி ஜூன் 6ம் தேதியும், 11ம் தேதி ஆப்கானுடனும் மோத உள்ளது. அதற்கான 29பேர் கொண்ட அணியில் இந்திய வம்சாவழி வீரர் தஷின் முகமது(17) இடம் பெற்றுள்ளார். இந்திய வம்சாவழி வீரர் ஒருவர், கத்தார் அணியில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : Olympic Qualifying Boxing Tournament ,Bangkok, Thailand ,Ankushita Boro ,Nishant Dev ,T20 World Cup ,Dinakaran ,
× RELATED சர்வதேச யோகா போட்டியில் முதலிடம்: கல்லூரி மாணவிக்கு பாராட்டு