×

சர்வதேச யோகா போட்டியில் முதலிடம்: கல்லூரி மாணவிக்கு பாராட்டு

 

திருப்பூர், ஜூன் 22: தாய்லாந்து பாங்காக்கில் சர்வதேச யோகா சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மே 29ம் தேதி நடந்தது. 12 நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் ஆன்லைனில் வழியாக பங்கேற்றனர். தமிழக அணியில், திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி முதுகலை ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு மாணவி ஜெயப்ரீத்தா பங்கேற்றார். நடன யோகா போட்டியில், (17 முதல் 25 வயது பிரிவு) பங்கேற்ற அவர் முதலிடம் பெற்றார். மாணவியை கல்லூரி முதல்வர் வசந்தி மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

The post சர்வதேச யோகா போட்டியில் முதலிடம்: கல்லூரி மாணவிக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : international ,Tirupur ,International Yoga Championship ,Bangkok, Thailand ,International Yoga Competition ,Dinakaran ,
× RELATED கும்பகோணம் அருகே சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்