×

அமெரிக்காவில் 10 நாட்கள் சுற்றுலா முடித்து சந்திரபாபு நாயுடு திரும்பினார்


திருமலை: அமெரிக்காவில் 10 நாட்கள் சுற்றுலா முடித்துக்கொண்டு சந்திரபாபு ஐதராபாத் திரும்பினார். ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடந்து முடிந்த பிறகு கடந்த 19ம் தேதி தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு மனைவியுடன் சுற்றுலா அமெரிக்கா சென்றார். ெதாடர்ந்து 10 நாட்கள் அங்கேயே இருந்தார். தொடர்ந்து நேற்று அவர் ஐதராபாத் திரும்பினார். சந்திரபாபு வருகையையொட்டி, கட்சித் தலைவர்கள் ஷாம்ஷாபாத் விமான நிலையத்துக்கு வந்தனர்.

சந்திரபாபுவை பார்த்தவுடன் கட்சியினர் சி.எம்., சி.எம். என்று கோஷமிட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதேபோன்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் பிரிட்டன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் சுற்றுலா மேற்கொண்டுள்ளார். அவர் நாளை நாடு திரும்ப உள்ளார்.

The post அமெரிக்காவில் 10 நாட்கள் சுற்றுலா முடித்து சந்திரபாபு நாயுடு திரும்பினார் appeared first on Dinakaran.

Tags : Chandrababu Naidu ,America ,Tirumala ,Chandrababu ,Hyderabad ,Telugu Desam Party ,chief minister ,US ,Andhra ,
× RELATED ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு...