×

கார் மீது லாரி மோதி சென்னை பெண் பலி: 7 பேர் படுகாயம்

தென்காசி: கடையநல்லூர் அருகே கார் மீது லாரி மோதியதில் சென்னை சேர்ந்த பெண் பலியானார். 7 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சென்னை, ஆவடியைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவரது மனைவி ஹேமலதா (60). இவர்களது மகன் மாதவன் (29). இவரது உறவினர்கள் தங்கராஜன் (35), அவரது மனைவி பூங்கொடி (30), மகன்கள் வெற்றிமுருகன் (7), மோகித்தம் (5) மற்றும் வெங்கடேசன் மனைவி சசிகலா (48), மகள் காவ்யா (24) ஆகிய 6 பேரும் சென்னையிலிருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு நேற்று காலை குற்றாலம் வந்தனர். அங்கு விடுதியில் தங்கி இருந்து அனைத்து அருவிகளிலும் நீராடினர். பின்னர் இரவு 11 மணிக்கு மேல் சென்னைக்கு அதே காரில் புறப்பட்டனர். காரை மாதவன் ஓட்டினார்.

கடையநல்லூரை அடுத்த புன்னையாபுரத்திற்கு கார் வந்தபோது எதிரே தவிடு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரி திடீரென்று மோதியது. இதில் காரின் முன் பகுதி நொறுங்கியது. இதில் காரில் இருந்த 8 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். இடிபாடுகளில் சிக்கிய 8 பேரையும் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஹேமலதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மற்ற 7 பேருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. இறந்த ஹேமலதா உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி லாரி டிரைவர் குருசாமி என்பவரை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

The post கார் மீது லாரி மோதி சென்னை பெண் பலி: 7 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tenkasi ,Kadyanallur ,Venkateswaran ,Awadee, Chennai ,Hemalatha ,
× RELATED சட்டவிரோத செயல்கள்; ஒரே நாளில் 102 பேர்...