×

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் அமித் ஷா கண்டித்தது குறித்து பதிலளிக்க தமிழிசை சவுந்தரராஜன் மறுப்பு

சென்னை: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் அமித் ஷா கண்டித்தது குறித்து பதிலளிக்க தமிழிசை சவுந்தரராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆந்திராவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்றார். சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையிலேயே தமிழிசையை அழைத்து அமித் ஷா கண்டித்தது சர்ச்சையானது. அமித் ஷா கண்டித்தது குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் கை கூப்பியவாறு தமிழிசை சென்றார்.

The post ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் அமித் ஷா கண்டித்தது குறித்து பதிலளிக்க தமிழிசை சவுந்தரராஜன் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Tamilisai Soundararajan ,Amit Shah ,Chandrababu Naidu ,Andhra Pradesh ,Chennai ,Chennai airport ,Chandrababu Naidu… ,Andhra ,
× RELATED ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு...