×

இளங்கலை படிப்பில் சேர முசிறி அரசு கல்லூரியில் சிறப்பு கலந்தாய்வு

 

முசிறி, மே 29: முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை படிப்பில் சேர சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் சிறப்பு பிரிவுகளான முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படையினர் மற்றும் அகதிகள் ஆகியோருக்கு இளங்கலை படிப்பில் சேர சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் கணேசன் தலைமை வகித்தார். மாணவர் சேர்க்கை குழு துறை தலைவர்கள் முருகராஜ் பாண்டியன், மஞ்சுளா தேவி, சந்திரசேகர் மற்றும் உதவி குழுவினர் ரேவதி, ஹேமா, சுந்தரராசு ஆகியோர் மாணவர் சேர்க்கை நடத்தினர்.

மேலும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களின் சான்றிதழ்களை சரி பார்த்து அவர்களுக்கு உதவி செய்தனர். சிறப்பு பிரிவில் பிலிட் தமிழ், ஆங்கிலம் பி.ஏ வரலாறு, பொருளாதாரம், பி.காம், பிஎஸ்சி இயற்பியல், ரசாயனம், தாவரவியல், விலங்கியல், கணிதம் மற்றும் கணினி அறிவியல் ஆகிய படங்களுக்கான செயற்கை நடைபெற்றது. முசிறி அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் 11,332 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். கணினி அறிவியல் மற்றும் பி.காம் பாடங்களுக்கு அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The post இளங்கலை படிப்பில் சேர முசிறி அரசு கல்லூரியில் சிறப்பு கலந்தாய்வு appeared first on Dinakaran.

Tags : Musiri Government College ,Musiri ,Arijar Anna Government College of Arts ,Anna Government College of Arts ,
× RELATED முசிறி, தொட்டியத்தில் நியாய விலை கடையில் குறைதீர் முகாம்