×

வீட்டை பூட்டி மருமகள் சாவியை எடுத்துச்சென்றார் இறுதி சடங்கு ெசய்ய வழியின்றி நடுரோட்டில் கணவர் சடலத்துடன் காத்திருந்த மூதாட்டி

திருமலை: திருமலையில் கடந்த 50 ஆண்டுகளாக சீனிவாசலு(70), குரம்மா(68) தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். திருமலையில் மாஸ்டர் பிளான் திட்டத்தில் நான்கு மாட வீதி விரிவாக்கத்திற்காக திருமலையில் குடியிருப்பவர்களின் வீடுகள் கடந்த 1983ம் ஆண்டு இடிக்கப்பட்டது. இதில் சீனிவாசலு வீடும் இடிக்கப்பட்டது. இதனால் இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சில ஆண்டுகளுக்கு பிறகு வீடுகள் மற்றும் கடைகளை தேவஸ்தானம் வழங்கியது. அதில் சீனிவாசலுக்கு ஒரு கடை மற்றும் வீட்டை தேவஸ்தானம் வழங்கியது. இந்த கடையில் வளையல், சுவாமி படங்கள் வைத்து வியாபாரம் செய்து சீனிவாசலு குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் தம்பதியினருக்கு ஒரு மகன் என்பதால் கடைசி காலத்தில் மகன் தங்களை பார்த்து கொள்வான் என நம்பி தனது பெயரில் இருந்த சொத்தை மகன் பெயரில் எழுதி வைத்தனர். ஆனால் மகன் நோய்வாய்ப்பட்டு சில ஆண்டுகள் முன்பு இறந்தார்.

இதனால் மகன் பெயரில் இருந்த சொத்தை மருமகள் தேவஸ்தான வருவாய் அலுவலகத்தில் கூறி கணவர் பெயரில் உள்ள சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றி அதனை விற்று பணத்துடன் பிறந்த ஊரான ராஜமுந்திரிக்கு சென்று விட்டாராம். வீட்டின் சாவியை கூட கொடுக்காமல் மருமகள் எடுத்து சென்றுவிட்டதால் வயதான நிலையில் சீனிவாசலு, குரம்மா தம்பதி திருப்பதி சேஷாச்சல நகரிலேயே தவித்தபடி இருந்து வந்தனர். இந்நிலையில் சீனிவாசலு போதிய உணவின்றி நேற்றுமுன்தினம் இறந்தார். யாரும் உதவி செய்யக்கூட இல்லாமல் சாலையிலேயே சடலத்தை வைத்தபடி குரம்மா பரிதாபமாக உட்கார்ந்திருந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.

 

The post வீட்டை பூட்டி மருமகள் சாவியை எடுத்துச்சென்றார் இறுதி சடங்கு ெசய்ய வழியின்றி நடுரோட்டில் கணவர் சடலத்துடன் காத்திருந்த மூதாட்டி appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Srinivasalu ,Kuramma ,Tirumalai ,
× RELATED ஆந்திர மாநில புதிய டிஜிபி நியமனம்