×

சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் சாத்விக் – சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி – சிராக் ஷெட்டி இணை அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறியது. சிங்கப்பூர் உள் அரங்க வளாகத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன. ஆண்கள் இரட்டையர் பிரிவில் டென்மார்க்கின் டேனியர் லுண்ட்கார்ட் – மேட்ஸ் வெஸ்டர்கார்ட் ஜோடியுடன் (34வது ரேங்க்) மோதிய நம்பர் 1 சாத்விக் – சிராஜ் இணை 20-22, 18-21 என்ற நேர் செட்களில் தோல்வியைத் தழுவியது. இந்த ஆட்டம் 47 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவுமுதல் சுற்றில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யபை 46 நிமிடங்களில் 19-21, 20-22 என்ற நேர் செட்களில் தாய்லாந்து வீராங்கனை போர்ன்பிச்சா சோயிகிவாங் வீழ்த்தினார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் அஷித் சூர்யா – அம்ருதா பிரமுதேஷ், ரூத்பர்னா பண்டா – ஸ்வேதபர்னா பண்டா ஜோடிகளும் ஏமாற்றமளித்தன. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மற்றொரு இந்திய வீரர் பிரியன்ஷு ராஜ்வத்தும் தோல்வியை தழுவினார். முதல் சுற்றில் நேற்று இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், இன்று நடைபெறும் ஒற்றையர் ஆட்டங்களில் கிடாம்பி ஸ்ரீகாந்த், லக்‌ஷயா சென், எச்.எஸ்.பிரணாய், பி.வி.சிந்து கலப்பு இரட்டையர் பிரிவில் சதீஷ்குமார் கருணாகரன்/அதா வாரியத், சுமிதிரெட்டி/சிக்கி ரெட்டி, மகளிர் இரட்டையர் பிரிவில் சிம்ரன் சிங்/ரிதிகா தாக்கர், தனிஷா கிராஸ்டோ/அஸ்வினி பொன்னப்பா, த்ரீஷா ஜாலி/காயத்ரி கோபிசந்த், ஆண்கள் இரட்டையர் பிரிவில் கிருஷ்ண பிரசாத் காரகா/சாய் பிரதீக் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

 

The post சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் சாத்விக் – சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி appeared first on Dinakaran.

Tags : Singapore Open Badminton Chadwick ,Chirag ,SINGAPORE ,India ,Sathwaik Sairaj Rangritty ,Chirag Shetty ,Singapore Open Badminton Series ,Singapore Indoor Stadium Complex ,
× RELATED ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில்...