சென்னை: தொழில்நுட்ப கோளாறால் விமானம் தாமதம் ஆனதால் பயணிகள் தவித்து வருகின்றனர். சென்னை – சிங்கப்பூர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறால் விமானம் புறப்படுவதில் 5 மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு, இன்று அதிகாலை 1.40 மணிக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் புறப்பட்டுச் செல்ல வேண்டும். ஆனால் விமானத்தில் ஏற 186 பயணிகள் தயாராக இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. 186 பயணிகள் விமானத்தில் ஏற்றாமல் ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.
விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாக காத்து இருந்த பயணிகள், அவ்வப்போது விமான அதிகாரிகளிடம் வாக்குவாதங்களிலும் ஈடுபட்டனர். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு, இன்று காலையில் சரி செய்யப்பட்ட பின்பு பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏற்றப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 5 மணி நேரம் தாமதமாக, இன்று காலை 7 மணி அளவில் சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது.
The post ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறால் விமானம் தாமதம்: பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.