×

உலக கோப்பையையும் முத்தமிடுவேன்; ரிங்குசிங் நம்பிக்கை

மும்பை: டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் மாற்று ஆட்டக்காரராக இடம் பெற்றுள்ள ரிங்கு சிங் ஓரிரு நாட்களில் அமெரிக்கா புறப்படுகிறார். இந்நிலையில் அவர் கூறியதாவது:- நான் முதலில் நொய்டா செல்ல உள்ளேன். அதன் பிறகு அமெரிக்காவுக்கு புறப்படுகிறேன். ஐபிஎல் கோப்பையை தூக்கிப்பிடித்து முத்தமிட்டதைபோல் உலகக் கோப்பையையும் நான் தூக்கிப்பிடித்து முத்தமிடுவதை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு ஒருவரை மட்டும் பாராட்ட முடியாது. ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்துள்ளோம். கம்பீர் ஆலோசகராக வந்த பிறகு நிறைய விஷயங்கள் மாறிவிட்டன. சுனில் நரேன் தொடக்க ஆட்டக்காரராக இறக்கப்பட்டார். அதற்கு ஏற்ப அவரும் பேட்டிங்கில் நன்றாக ஆடினார். அணியில் உள்ள அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர்’’ என்றார்.

 

The post உலக கோப்பையையும் முத்தமிடுவேன்; ரிங்குசிங் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : world cup ,Ringusing ,Mumbai ,Ringu Singh ,T20 World Cup ,America ,Noida ,IPL… ,Ringusing Hope ,Dinakaran ,
× RELATED யுரோ கோப்பை கால்பந்து இன்று ஜெர்மனியில் தொடக்கம்